சென்னை:சென்னையில் நேற்று தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், "இரும்பின் தொன்மை" என்ற தமிழ் மற்றும் ஆங்கில நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் தமிழர்களே" என்று தெரிவித்தார். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில், உலக இரும்பு காலம் என்றால் என்ன? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.
இரும்பு காலம் என்பது என்ன?
உலக இரும்பு காலம் என்பது கி.மு.1200 முதல் கி.மு.500 வரை என வரலாறு கூறுகிறது. ஆனால், அதற்கு முன்பே தமிழ் மண்ணில் இரும்பின் பயன்பாடு இருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கற்காலம், உலோக காலம் ஆகியவற்றை தொடர்ந்து இரும்பு காலம் தொடங்கியது. இரும்பு காலத்தில் ஐரோப்பிய நாடுகள், ஆசியா, ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் இரும்பில் இருந்து ஆயுதங்கள், கருவிகள் உருவாக்கப்பட்டன.
உலோக காலத்தின் போதே அவ்வப்போது அந்த காலத்தை சேர்ந்த மனிதர்கள் இரும்பு தாதுவில் இருந்து இரும்பை பிரித்து எடுத்திருக்கலாம். இரும்பை அவர்கள் மதிப்புக் குறைந்த உலோகமாக பார்த்திருக்கலாம். உலோகத்தால் செய்யப்பட்ட கருவிகள், ஆயுதங்களைப் போல கடினமானதாகவோ அல்லது உபயோகிப்பதற்கு எளிதாகவோ இல்லை என்று கருதினர். கார்பனைக் கொண்டு இரும்பை சூடாக்கி மிக கடினமான உலோகத்தை உருவாக்கினர். எஃகுவை எப்படி உருவாக்குவது என மக்கள் தெரிந்து கொண்ட பிறகுதான் பரவலாக இரும்பு பயன்பாடு அதிகரித்தது.
எப்போது இரும்பு காலம் இருந்தது?
துருக்கியின் ஹிட்டிட்டி அரசு, கிரேக்கத்தின் மைசீனிய நாகரிகம் உள்ளிட்ட பல முன்னணி உலோக கால நாகரீகங்கள் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து கிழக்கின் அருகே மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் இரும்பு காலம் என்பது தோராயமாக கி.மு.1200ஆம் ஆண்டில் தொடங்கியதாக இதுவரை வரலாறு கூறுகிறது.
உலோக கால அரசர்களின் வீழ்ச்சிகளுக்கான காரணங்கள் தொடர்ந்து புரியாத மர்மமாகவே உள்ளது. கி.மு. 1250 முதல் கி.மு. 1100 வரையிலான 150 ஆண்டுகளில் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்தியம் முழுவதும் தொடர்ச்சியான தீவிர வறட்சி காரணமாக உலோக காலம் அழிந்திருக்கலாம் என்று தொல்லியல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம், பஞ்சம், அரசியல் நிலையற்ற தன்மை, நாடோடி பழங்குடியினரின் படையெடுப்பு ஆகியவற்றாலும் உலோக காலம் வீழ்ச்சியுற்றிருக்கலாம் என்று தெரிகிறது. வணிக பாதைகளுக்கு நேரிட்ட இடையூறு கூட உலோகம் உருவாக்க தேவைப்படும் செம்பு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக உலோகம் உருவாக்குபவர்கள் அதற்கு மாற்றாக இரும்புக்கு மாறியிருக்கலாம் என்றும் தெரிகிறது.
பல்வேறு அறிஞர்கள் கி.மு. 550 ஆண்டில் இரும்பு காலம் முடிவுக்கு வந்திருக்கலாம் என்று சொல்கின்றனர். வரலாற்றின் தந்தை என அழைக்கப்படும் ஹெரோடோடஸ் வரலாறுகள் என்ற புத்தகத்தை எழுதத் தொடங்கிய போது, இரும்பு காலத்தின் முடிவு என்பது பிராந்தியத்தைப் பொருத்து வேறுபடலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடும்பாறையில் இரும்பு கால ஈம சின்னங்கள் (Image credits-TNGOVERMENT ANTIQUITY OF IRON BOOK) மைசீனியன் கிரேக்கர்கள் கல்வி அறிவு பெற்ற சமூகத்தினர். சில முன்னணி அறிஞர்கள் இருந்தனர் என்று கூறப்பட்ட போதிலும், கிரேக்கர்களின் ஆரம்பகட்ட இரும்பு காலம் குறித்து எந்தவித எழுதப்பட்ட ஆவணங்களைக் கொண்டிருக்கவில்லை. சுமார் 300 ஆண்டுகள் நீடித்த அந்தக் காலத்தைச் சேர்ந்த சில கலைப்பொருட்கள் அல்லது இடிபாடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இரும்பு காலத்தின் பிந்தைய காலத்தில் கிரேக்க பொருளாதாரம் என்பது மீட்சி பெற்றதாக இருந்தது. இந்த காலகட்டத்தில் கிரேக்கம் கிளாசிக்கல் யுகத்தில் நுழைந்தது. இந்த காலகட்டம் என்பது கலாசார சாதனைகளைக் கொண்டிருந்தது, சாக்ரடீஸ் உள்ளிட்ட தத்துவஞானிகள் இந்த காலகட்டத்தில் வாழ்ந்தனர்.
பாரசீகப் பேரரசு
கிழக்கின் அருகே இரும்பு காலத்தின்போது நாடோடி மேய்ப்பர்கள் செம்மறி ஆடுகள் மற்றும் கால்நடைகளை வளர்த்தனர். ஈரானிய பீடபூமி என அழைக்கப்பட்ட இது பாரசீகம் என்று அழைக்கப்படும் ஒரு நாடாக உருவாகத் தொடங்கியது. மனிதர்கள் எஃகுவை உருவாக்க தொடங்கிய காலகட்டத்துக்கு பிறகு பாரசீகர்கள் பேரரசை உருவாக்கினர். முந்தைய உலோக அல்லது கற்கலால் ஆன ஆயுதங்களை விடவும் இரும்பு ஆயுதங்கள் கூர்மையானதாக, வலிமையானதாக இருந்தன.
பண்டைய கால பாரசீகர்கள் குதிரையின் மீதேறி சண்டையிட்டனர். குதிரைகள் மற்றும் சவாரி செய்பவர்கள் எஃகு கவசத்தால் முழுமையாக மூடப்பட்டிருந்த ஒரு கவச குதிரைப்படையை கொண்டிருந்த முதலாவதாக நாகரீகம் முன்னேற்றம் அடைந்தவர்களாக இருக்கலாம். முதலாவது, பாரசீக அரசரின் அரசாட்சி வரலாற்றில் பெரிய அரசாட்சிஆக இருந்தது. கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் மலைப்பகுதிகள் முதல் இந்தியாவின் சிந்து சமவெளி வரை பரந்து விரிந்திருந்தது.
இரும்புகாலத்தின் மலைக்கோட்டைகள்
இரும்பு கால யுகத்தின் போது ஐரோப்பாவில் வாழ்ந்த செல்ட்ஸ் சமூகத்தினர் மலைப்பகுதிகளில் கோட்டைகளில் வாழ்ந்தனர். கோட்டையை சுற்றி சுவர்கள், அகழிகள் இருந்தன. எதிரி நாட்டவர்களால் தாக்கப்படுவதைத் தடுக்க போர் வீரர்கள் மலை கோட்டைகளை காக்கும் பணியில் ஈடுபட்டனர். பதப்படுத்தப்பட்ட உடல்கள் இரும்பு காலத்தில் வடக்கு ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டன. Bog உடல்கள் என்று கூறப்படுகின்றன. டென்மார்க்கில் இருந்து டோலண்ட் மனிதர், கல்லக் மனிதர் என்பவர் ஐஸ்லாந்தில் இருந்தும் இரும்பு காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உடல்களாகும்.
தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது போன்று ஈமக்குழியில் இருந்த உடல்களில் மர்மம் என்பது, ஒரே விஷயத்தில் ஒன்று பட இருந்தன. அந்த உடல்கள் கொடூரமான முறையில் இறந்தவையாக இருந்தன. உதாரணமாக லிண்டோவ் என்ற மனிதர் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதி அருகே பதப்படுத்தப்பட்ட உடலாக கண்டுபிடிக்கப்பட்டார். இவர் தலையின் மீது தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது. அவரது தொண்டை அறுக்கப்பட்டிருக்கிறது. விலங்கு தசை நாரினால் செய்யப்பட்ட சவுக்கால் அவர் அடிக்கப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் அவரது உடல் பதப்படுத்தப்பட்டிருக்கிறது.
செல்ட்ஸ் பழங்குடியினர் எழுத்துவடிவிலான மொழியை அந்த காலகட்டததில் அறிந்திருக்கவில்லை. எனவே இவர்கள் ஏன் கொல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டனர் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. மத காரணங்களுக்காக இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். வாள்கள், கப்கள், ஷீல்டுகள் ஆகிய இதர இரும்பு கால யுகத்தின் கருவிகள் பதப்படுத்தப்பட்ட வடிவில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை ட்ரூயிட் பாதிரியார்கள் தலைமையிலான மத விழாக்களில் பேகன் கடவுள்களுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.
தமிழ்நாட்டில் இரும்பு காலம்
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழ்நமண்டியில் ஈமக்குழியில் ஈமப்பேழை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஈமப்பேழையில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள இரும்பு கி.மு. 1769-1615 ஆண்டை சேர்ந்தது என தோராயமாக கண்டறியப்பட்டுள்ளது. மயிலாடும்பாறையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த இரும்பு மாதிரி கி.மு.1615-கி.மு.2172க்கு உட்பட்டதாகும் என கண்டறியப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் இருந்து மீட்கப்பட்ட வாள்கள் (TN DIPR) 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது. தற்போது மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுக காலத்தை கி.மு.4000-ம் ஆண்டின் முற்பகுதிக்கு கொண்டு சென்றிருக்கிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகம் ஆகி இருக்கிறது என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
உணவு உற்பத்திக்கு அடிப்படை தேவை!
இது குறித்து கருத்துத் தெரிவித்த மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் முனைவர் மீ மருது பாண்டியன்,"உணவுத் தேவைக்காக நாடோடிகளாக அழைந்து திரிந்த மனிதன் ஒரு இடத்தில் தங்கி, தங்களது உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு மூன்று முக்கிய கூறுகள் தேவைப்பட்டன. அவை, நெருப்பு, நீர் மற்றும் இரும்பு போன்றவையாகும். இம்மூன்று கூறுகளையும் அவன் கண்டறிவதற்கு எடுத்துக் கொண்ட காலம் என்பது பல லட்சம் ஆண்டுகள் ஆகும்.
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் இருந்து மீட்கப்பட்ட வாள்கள் (TN DIPR) முதலில் நெருப்பினைக் கண்டுபிடித்தான். நெருப்பினைக் கொண்டு தன்னை தற்காத்துக் கொள்வதற்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொண்டான். மேலும் உணவுத் தேவைக்காகவும், பச்சையாக உணவு உண்பதின் மூலமாக ஏற்படும் சிரமங்களை கண்டு உணர்ந்த மனிதன் அவற்றை சமைத்து உண்ணத் துவங்கினான். அன்றாட வாழ்வில் பெறும் பகுதியினை உணவுத் தேவைக்காக மட்டும் பெரும்மளவிலான நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக ஓரிடத்தில் இருந்து கொண்டு உணவு உற்பத்தியை தொடங்க எண்ணிய மனிதன் நீர் நிலைகளுக்கு அருகில் குடிபெயர்ந்தான்.
மேலும், நீரினைக் கொண்டு உணவு உற்பத்தியை தொடங்கினான். உணவு உற்பத்திக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றானது இரும்புக் கருவிகளாகும். உலகில் முதன் முதலில் இரும்பின் பயன்பாட்டினை முதன் முதலில் கண்டறிந்தவர் யார் என்பது குறித்து உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு மேற்கொண்டிருக்கும் இந் நேரத்தில், முதன் முதலில் இரும்பின் பயன்பாட்டினை அறிந்தவர்கள் தமிழர்கள் என்று உரக்க குரல் எழுப்பியுள்ளார் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின். உண்மையை நிரூபிக்க தமிழக அரசு முன்னெடுத்துள்ள முத்தாய்ப்பான பணிகளில் ஒன்று மேற்பரப்பாய்வும், அகழாய்வும்.
தமிழகமெங்கும் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் முடிவுகளில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், கீழடி, கீழநமண்டி, மயிலாடும்பாறை போன்றை இடங்களில் கிடைத்த இரும்பு பொருட்களின் மூலம், உலகில் முதன் முதலில் இரும்பின் பயன்பாட்டினை நன்கு உணர்ந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கு போதுமான சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன. சிவகளை அகழாய்வின் முடிவின் அடிப்படையில் இரும்பின் பயன்பாடு ஏறத்தாழ 5300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதினை நிரூபித்துள்ளது. இவ்வகழாய்வினை மேற்கொண்ட தமிழ்நாடு அரசுக்கும், தொல்லியல் துறைக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.,"என்கிறார்.