மதுரை:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரத்தை சேர்ந்த மணி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''கடந்த 17.8.2024 அன்று மேஜிக் காளான் (போதை காளான்) கடத்துவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டதாகவும், அப்போது அந்த வழியாக வந்த எனது காரை மறித்து சோதனை செய்ததில், 100 கிராம் மேஜிக் காளான் இருந்ததாகவும் கூறி, கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிந்து என்னை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
எனது காரில் போதை காளான் இருந்தது தொடர்பாக தடய அறிவியல் சோதனை செய்யப்படவும் இல்லை. என் மீது கூறப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். என்னை சிறையில் அடைத்ததால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க:மண்ணுக்குள் 88 சவரன்.. கொள்ளை பணத்தில் 4 கோடிக்கு நூற்பாலை.. தேனி கும்பல் சிக்கியது எப்படி?
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆண்டனி சந்தோஷ், போதை காளான் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வகுத்துள்ள உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் போதை தடுப்பு சட்டப்பிரிவு 14 இன் படி பறிமுதல் செய்யப்பட்ட போதை காளான் பரிசோதனை கூடத்திற்கும் அனுப்பி அறிக்கை பெறவில்லை எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.