சென்னை: நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக சென்னையில் பட்டாசு வெடிப்பதற்கென்று காலை மற்றும் மாலையில் நேரங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலானோர் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை பொருட்படுத்தாமல் பட்டாசுகளை வெடித்திருந்தனர். சென்னையில், அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்தாக 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 34 ஆயிரம் தெருக்களில் வெடித்த பட்டாசுகளின் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக அகற்றி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி தகவல்: இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், '' சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சென்னையில் தூய்மை பணிக்காக தினசரி தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இதில் பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்காக மட்டுமே நியமிக்கப்பட்ட 19,600 தூய்மை பணியாளர்கள் உள்பட மொத்தம் 23 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக பட்டாசு கழிவுகளை அகற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க:'விஜய் அரசியல் வருகை இந்தியா கூட்டணிக்கு லாபம்'.. என்ன சொல்கிறார் செல்வப்பெருந்தகை..?