தஞ்சாவூர்:கும்பகோணம் மடத்துத்தெருவில் காஞ்சி சங்கர மடத்தின் கிளை அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோலவே இந்த ஆண்டும் ஸ்ரீ சங்கரமட கைங்கர்யா சபா சார்பில் நவராத்திரி விழா கடந்த அக்.3ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த விழாவானது வரும் அக்.12ஆம் தேதி சனிக்கிழமை விஜயதசமி தினம் வரை 10 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சுவாசினி பூஜை (எ) சுமங்கலி பூஜை இன்று நடைபெற்றது.
இதையும் படிங்க:இந்தியாவில் இருந்தே கைலாய தரிசனம்: சிவபக்தர்களுக்கு நற்செய்தி; பயணத்தை திட்டமிடுவது எப்படி?
இதில் ஏராளமான பெண்கள் மடிசார் சேலை அணிந்து கொண்டு லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்தனர். மேலும் இந்நிகழ்வை முன்னிட்டு உலக மக்கள் நலன் வேண்டியும், இயற்கை பேரிடர்கள், கடும் நோய் நொடிகள் நேராமல் தடுக்க வேண்டியும், விசேஷ யாகம் செய்யப்பட்டது. இதன் பூர்ணாஹுதிக்கு பிறகு மகா தீபாராதனை செய்து அனைவருக்கும் புனிதநீர் தெளிக்கப்பட்டு தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்