ETV Bharat / state

'இலக்கு சரியாக இருந்தால் வெற்றி சரியாக இருக்கும்'.. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் பேட்டி..! - CHESS CHAMPION GUKESH INTERVIEW

செஸ் ஒரு சிறந்த விளையாட்டு. அதில், நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர் குகேஷ் சென்னையில் பேட்டியளித்தார்.

தமிழக வீரர் குகேஷ் மற்றும் அவரது பெற்றோர்
தமிழக வீரர் குகேஷ் மற்றும் அவரது பெற்றோர் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

சென்னை: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள தமிழக வீரர் குகேஷ் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் இன்று (டிச.16) சென்னை வந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குகேஷ் சென்னை முகப்பேரில் உள்ள அவரது பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டார். பள்ளி நிர்வாகம் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து குகேஷ் தனது தாய், தந்தையுடன் அமர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி

அப்போது குகேஷ் கூறுகையில், '' உலக சாம்பியன்ஷிப் ஆவது என்னுடைய சிறுவயது கனவு.. அந்த கனவை நினைவாக்கிவிட்டு எனது வீட்டுக்கு வருவதில் சந்தோஷமாக உள்ளது. நான் வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரம்தான் ஆகிறது.. உலக சாம்பியன் பட்டம் பெற்றிருப்பது தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் எவ்வளவு பெருமையாக உள்ளது என்பதை பார்க்க எனக்கு சந்தோஷமாக உள்ளது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.. இனி வீட்டில் இருக்கும் நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பேன். இந்த போட்டிகளில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.. வேறு மாதிரியான எமோஷன் இருந்தது.. 14 ஆவது சுற்றில் வெற்றி பெறும்போது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது.

இலக்கு சரியாக இருக்க வேண்டும்

எதை செய்தாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும்.. செஸ் ஒரு சிறந்த விளையாட்டு.. அதில், நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.. செஸ் மீதுள்ள காதலால் என்னுடைய போட்டிகளை அந்த உணர்வோடு விளையாடுவேன்.. இலக்கு சரியாக இருந்தால் வெற்றி சரியாக இருக்கும். 14 ஆவது சுற்றில் சற்று சாதகம் இருக்கும் என்று நினைத்தேன்.. அதற்கு தயாராகவே நான் இருந்தேன். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை முதல் முறையாக ஆடுகிறேன் என்பதால் சற்று நடுக்கம் இருக்கும் என்று எனக்கு தெரியும். நிறைய நல்ல முடிவுகளை நான் எடுக்கவில்லை என்றாலும் நல்லது நடக்கும் என்று நினைத்தேன்.

முதல் சுற்றில் டைபிரேக் பற்றி நினைக்கவில்லை, 2 மற்றும் மூன்றாவது சுற்றுகளில் நான் நினைத்தேன் வாய்ப்புகள் இருக்கும் என்று. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் எப்பொழுது நான் வெற்றி பெற்றாலும் என்னை வீட்டுக்கு அழைத்து பாராட்டி, ரொக்க பரிசு கொடுக்கிறார்கள்.

2023 ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசு நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் வெற்றி பெற்றதால் செஸ் கேண்டிடேட் போட்டிற்கு தகுதி பெற முடிந்தது. தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பது மட்டுமில்லாமல், நிறைய உதவி எனக்கு செய்துள்ளார்கள். தமிழ்நாடு அரசுக்கு எனது நன்றி'' என்று உலக செஸ் சாம்பியன் குகேஷ் கூறினார்.

தந்தை ரஜினிகாந்த்

குகேஷின் தந்தை ரஜினிகாந்த் கூறுகையில், '' எந்தத் துறையாக இருந்தாலும் அதில் முதலில் விருப்பம் இருக்க வேண்டும். இல்லையென்றால், எதையும் செய்ய முடியாது. நாங்கள் முதலில் செஸ் என்று தேர்வு செய்யவில்லை.. விளையாட்டை பொழுதுபோக்காகத்தான் முதலில் தேர்வு செய்தோம். எங்களுடைய வசதிக்காகத்தான் நாங்கள் செஸ்-ஐ தேர்வு செய்தோம். குகேஷிற்கு விருப்பம் அதிகமாக இருந்ததால், அவன் அதில் கடின உழைப்பு செலுத்தினான். உங்கள் குழந்தைகளுக்கு எதில் அதிக விருப்பம் உள்ளதோ அதை பெற்றோர்கள் தேர்வு செய்து குழந்தைகளுக்கு உதவ வேண்டும்'' என்று அறிவுறுத்தினார்.

முன்னதாக, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்க்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஐந்து கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

டைபிரேக்:

ஒரே போட்டிக் குழுவில் உள்ள இரண்டு வீரர்கள் ஒரு சுற்றின் முடிவில் ஒரே மதிப்பெண்ணைப் பெற்றால், டைபிரேக்கர் முறை பயன்படுத்தப்படுகிறது. அதிக டைபிரேக்கர் மதிப்பெண் பெற்ற வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.