தஞ்சாவூர்:பச்சிளம் குழந்தையை வளர்க்க இயலாத தாய்மார்கள் குழந்தைகளை எதும் செய்துவிடாமல் தொட்டில் குழந்தை திட்டத்தில் அரசிடம் ஒப்படையுங்கள் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் சேதுபாவாசத்திரம் அருகே ஆண்டிக்காடு கிராமத்தில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் கடந்த நவம்பர்.5 ஆம் தேதி பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்டு கிடந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த குணபாலன் என்பவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்து, பச்சிளம் குழந்தையை வீசிச் சென்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இந்த சம்பவம் குறித்து கூறுகையில்,“சேதுபாவாசத்திரம் பகுதியில் பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து பச்சிளம் குழந்தை வீசப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. குழந்தையின் தாயார் யார் என விசாரணை நடத்தி வருகிறோம்.