தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்! - thanjavur bus accident - THANJAVUR BUS ACCIDENT

thanjavur bus accident: தஞ்சாவூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

THANJAVUR BUS ACCIDENT
THANJAVUR BUS ACCIDENT

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 11:25 AM IST

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை தனியார் கல்லூரி அருகே கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி இன்று (ஏப்.24) காலையில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு புறநகர் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பேருந்தில் பயணம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த லட்சுமி(50) என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் விபத்து குறித்து அய்யம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details