தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாங்குநேரி மாணவர் சின்னத்துரையை நேரில் சென்று பாராட்டிய தாடி பாலாஜி! - Thadi balaji praises chinnadurai - THADI BALAJI PRAISES CHINNADURAI

Thadi balaji praises nanguneri student chinnadurai: சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நிலையிலும், 12ஆம் வகுப்பு தேர்வில் சாதித்த நாங்குநேரி மாணவர் சின்னத்துரையை நடிகர் தாடி பாலாஜி நேரில் சென்று பாராட்டினார்.

Thadi balaji met student chinnadurai photo
மாணவர் சின்னத்துரையை நேரில் சென்று பாராட்டிய தாடி பாலாஜி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 9:46 AM IST

திருநெல்வேலி: நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கையை சக மாணவர்கள் சாதிய வன்முறை காரணமாக அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு, நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 2023 - 24ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. அதில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

இந்தத் தேர்வில் அவர், தமிழ் - 71, ஆங்கிலம் - 93, பொருளியல் - 42, வணிகவியல் - 84, கணக்குப்பதிவியில் - 85, கணினி அறிவியல் - 94 என மொத்தம் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டினார்.

மேலும், பலரும் சின்னதுரைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் தாடி பாலாஜி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை திருநெல்வேலிக்கு நேரில் சென்று பாராட்டியுள்ளார். மேலும், சின்னதுரைக்கு புதிய ஆடையை பரிசாக வழங்கி, எந்த உதவி வேண்டுமானாலும் செய்து கொடுக்கிறேன் என கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க:சாதிய வன்கொடுமையிலும் சாதித்த நாங்குநேரி மாணவர் - நேரில் அழைத்து பாராட்டிய பிரபல இயக்குநர்! - PA RANJITH

ABOUT THE AUTHOR

...view details