தமிழ்நாடு

tamil nadu

தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு - tetojac protest

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 1:33 PM IST

Updated : Jun 27, 2024, 6:55 PM IST

TETOJAC protest: தொடக்கக் கல்வித் துறையில் மாநில அளவில் முன்னுரிமை நிர்ணயம் செய்வதற்கு வெளியிடப்பட்ட அரசாணை 243 ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை மூன்றாம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் போராட்டம்(கோப்புப்படம்)
டிட்டோஜாக் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு, டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் இரா.தாஸ் தலைமையேற்றார். டிட்டோஜாக் பேரமைப்பில் இணைந்துள்ள அனைத்து இயக்கங்களின் சார்பிலும் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, "தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதம் ஆசிரியர்களை குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் - 243ஐ ரத்து செய்ய அரசை வலியுறுத்தி அரசின் கவனம் ஈர்க்கும் வகையில் பல்வேறு கவனஈர்ப்பு நடவடிக்கைகளை டிட்டோஜாக் பேரமைப்பு மேற்கொண்டது. அரசின் உயர் அலுவலர்களும் மறுபரிசீலனை செய்வதாக உறுதி அளித்த நிலையில் தற்போது 243 அரசாணையினை நடைமுறைப்படுத்தும் வகையில் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியினையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்போது தொடக்கக் கல்வித்துறையில் பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கின் இறுதித்தீர்ப்பு வரும் வரையில் அறிவிக்கப்பட்டுள்ள கலந்தாய்வுப் பொதுமாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணையினை மாற்றி அமைத்து ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வினை நடத்திட வேண்டும் எனவும், ஆசிரியர்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி அரசாணை எண்: 243 நடைமுறைப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கலந்தாய்வுப் பொதுமாறுதலை நடத்தும் பட்சத்தில் டிட்டோஜாக் பேரமைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொடர் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், ஜூன் 28 ந் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம், ஜூலை 3 ந் தேதி மறியல் போராட்டம் கலந்தாய்வு நடைபெறும் மையங்களின் முன்பு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூடி அடுத்தக்கட்ட தொடர் போராட்டத்தினை ஜூலை 4 முடிவெடுத்து அறிவிக்கப்படும் எனவும் ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு அரசாணை 243ஐ ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வித் துறையில் மாநில அளவில் முன்னுரிமை நிர்ணயம் செய்வதற்கு வெளியிடப்பட்ட அரசாணை 243 ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை மூன்றாம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:"கலைமாமணி கலைஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்" - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

Last Updated : Jun 27, 2024, 6:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details