தென்காசி: குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஆட்டோ ஒட்டுநராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் பிரபு 10ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
பிரபுவுக்கு 2ஆம் வகுப்பு படிக்கும் போதே ஸ்கேட்டிங் விளையாட்டு மீது ஆர்வம் இருந்து வந்துள்ளதால் மகனின் ஆர்வம் அறிந்த பெற்றோர்கள் தங்களால் முடிந்த அளவு பயிற்சி மற்றும் அதற்கான உபகரணங்கள் வாங்கி கொடுத்து அதற்கான முயற்சியை எடுத்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, மாணவன் பிரபு மாவட்ட அளவிலும், மாநிலம் மற்றும் தேசிய அளவிலும் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டிகளில் தவறாமல் பங்கேற்று முதல் இடம், மூன்றாவது இடம் மற்றும் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.இந்த நிலையில் வருகின்ற ஜூன் 13 சர்வதேச அளவில் தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொள்வதற்குத் தகுதி பெற்றுள்ளார்.