சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று( நவ 15) ஒரே நாளில், கொல்கத்தா, புவனேஸ்வர், பெங்களூரு, திருவனந்தபுரம், சிலிகுரி ஆகிய 5 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் என மொத்தம் 10 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
புறப்பாடு : சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு கொல்கத்தா செல்லும் விமானம், காலை 7.45 மணிக்கு புவனேஸ்வர் செல்லும் விமானம், காலை 9.35 மணிக்கு பெங்களூரு செல்லும் விமானம், காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் விமானம், பகல் 12.35 மணிக்கு சிலிகுரி செல்லும் விமானம் ஆகிய 5 புறப்பாடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க :"அரசியல் கட்சியினருக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை" - உயர் நீதிமன்றம் அதிருப்தி!
வருகை : அதேபோல் பெங்களூரில் இருந்து இன்று காலை 9 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய விமானம், காலை 10.50 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானம், பகல் 12 மணிக்கு புவனேஸ்வரில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானம், பகல் 1 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானம், மாலை 6.15 மணிக்கு சிலி குரியிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானம் ஆகிய 5 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த 10 விமானங்களும் நிர்வாக காரணங்களால் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், முறையான முன்னறிவிப்புகள் இல்லாமல் ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்