தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசி மாவட்டத்தில் குத்தகைதாரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான கோயில் நிலங்கள்! - temple lands recovery

Temple Lands Recovery: தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை பகுதியில் பல லட்சம் மதிப்பிலான திருக்கோயில் நிர்வாக நிலங்கள் குத்தகைகாரர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட நிலத்தின் அறிவிப்பு பலகை
மீட்கப்பட்ட நிலத்தின் அறிவிப்பு பலகை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 8:45 PM IST

தென்காசி:கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களுக்கு சுசீந்திரம், செங்கோட்டை பகுதி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், தென்காசி மாவட்டத்தில் ஏராளமான கோயில்கள் மற்றும் நிலங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த நிலங்களை பயன்படுத்தி வரும் ஒரு சில குத்தகைத்தாரர்கள் கோயில் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை நீண்ட நாட்களாக செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் பலமுறை குத்தகை தொகையை செலுத்த குத்தகைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு குத்தகைதாரர்கள் பதில் அளிக்காத நிலையில், இன்று தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை பகுதியில் உள்ள ஸ்ரீ மூலவநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான 5 ஏக்கர் விவசாய நிலங்கள் கோயில் நிர்வாகம் சார்பில் மீட்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் சுசீந்திரம் செங்கோட்டைத் தொகுதி நிர்வாகத்தின் தலைவர் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமையிலான இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், இந்த நிலங்களை மீட்ட நிலையில் "இது போன்ற குத்தகை தொகை செலுத்தாமல் உள்ள கோயில் நிலங்கள் முழுவதுமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :"மகாவிஷ்ணு விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்" - அமைச்சர் அன்பில் மகேஸ்! - spiritual speech issue

ABOUT THE AUTHOR

...view details