சென்னை:தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆயிஷா (40). இவர், தான் சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்ததாகவும், இதனைத் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டி அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் பதிவு செய்வதற்காக ஆயிஷா கொண்டு வந்த மருத்துவம் தொடர்பான ஆவணங்களின் உண்மைத் தன்மை குறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளர் காமராஜ் சான்றிதழைச் சரி பார்த்த போது அவை அனைத்தும் போலியானது எனத் தெரிய வந்தது.