தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்வு மையத்தை 10 கி.மீ தொலைவிற்குள் ஒதுக்க வேண்டும் - ஆசிரியர்கள் போராட்டம் - exam center issue

Teachers Protest: தேர்வு பணிகளுக்கு 10 கி.மீ தொலைவிற்குள் இருக்கின்ற பள்ளிகளில் தேர்வு மையத்தை ஒதுக்கித்தர வலியுறுத்தி, கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு முன் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Teachers are protest in coimbatore
தேர்வு மையத்தினை 10 கி.மீ தொலைவிற்குள் ஒதுக்கித்தர வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 8:25 AM IST

Updated : Feb 28, 2024, 11:35 AM IST

தேர்வு மையத்தை 10 கி.மீ. தொலைவிற்குள் ஒதுக்கிட வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்

கோயம்புத்தூர்:மார்ச் ஒன்றாம் தேதி முதல், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்க உள்ளன. இந்நிலையில், கோவையில் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பணிகளுக்கு செல்லும் தேர்வு மையங்கள் மிகத் தொலைவில் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் பல்வேறு ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

எனவே, சுமார் 10 கி.மீ தொலைவிற்குள் இருக்கின்ற பள்ளிகளில் தேர்வு மையத்தை ஒதுக்கித்தர வலியுறுத்தி, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம், தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பேசிய அவர்கள், "தேர்வு மையங்கள் மிகத் தொலைவில் இருப்பதால், இருப்பிடத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு செல்லும் நேரமே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உள்ளது. இதையடுத்து, அங்கு தேர்வு பணிகள் முடியும் வரை காத்திருந்து வீடு திரும்ப வேண்டும். அதற்கு மறுநாளே, மறுபடியும் தொலைதூரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். ஆகையால், தேர்வு மையங்களை அருகாமையிலேயே மாற்றித்தர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தனர்.

இதையும் படிங்க:கொலைவெறி தாக்குதல்: 3 பேருக்கு கடுங்காவல் தண்டனை விதித்த சென்னை அமர்வு நீதிமன்றம்

Last Updated : Feb 28, 2024, 11:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details