சென்னை: எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலத்தில் மறுக்கப்பட்ட கோரிக்கைகளை மீண்டும் வெளியே கொண்டுவந்து அரசியல் செய்வது ஏற்புடையதல்ல என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக ஆட்சியில் பல்வேறு முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டி, தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கு. தியாகராஜன், "எடப்பாடி பழனிசாமி திடீரென எங்கள் மீது அக்கறை காட்டி பேசி வரும் நிலையில், அதிமுக ஆட்சியில் எங்கள் கோரிக்கைகள் எவ்வாறு நிராகரிக்கப்பட்டன என்பதை யாரும் இன்னும் மறக்கவில்லை. அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது, சரண் விடுப்பு ஒப்படைப்பை தடை செய்தது, உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை நிறுத்தியது யாரோ என்கிற கேள்விகளுக்கு பதில் அதிமுக ஆட்சி மட்டுமே," என்றார்.
பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் திமுக அரசின் சாதனைகள்
திமுக ஆட்சியில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் குறித்து தியாகராஜன் பேசினார்.
- குடும்ப நலநிதி - ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப நலநிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
- மகப்பேறு விடுப்பு - மகப்பேறு விடுப்பை ஓராண்டாக நீட்டித்தது.
- தொகுப்பூதிய ஆசிரியர்கள் - 53,000 தொகுப்பூதிய ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டு வந்தது.
- ஊதியக்குழு மாற்றங்கள் - திமுக ஆட்சியில் பெரும்பாலான ஊதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.