திருநெல்வேலி: நெல்லையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அப்பள்ளியில் பயின்று வரும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் ஓரினச் சேர்க்கை பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்கள் எழுந்தது.
அந்த புகாரின் அடிப்படையில், தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த ராபர்ட் புரூஸ் என்ற நபர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையில், நிரந்தர ஆசிரியராகச் செயல்பட்டு வந்த நெல்சன் என்ற நபரையும் பணி இடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வரும் பிரபல அரசு உதவி பெறும் பள்ளியில், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களே இவ்வாறு மாணவர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. நெல்லையில் மேலும் ஒரு ஆசிரியர் பணிநீக்கம்!