தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூளுடன் கலக்கப்படும் தேயிலை கழிவுகள்! கிலோ கணக்கில் பறிமுதல் செய்த அதிகாரிகள் - TEA BOARD CONOOR OFFICE

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து கோயம்புத்தூருக்கு கண்டெய்னர் லாரி மூலம் கொண்டுவரப்பட்ட 13,600 கிலோ தேயிலை கழிவுகளை தேயிலை வாரிய குன்னூர் மண்டல அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்படும் தேயிலை கழிவுகள்
பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்படும் தேயிலை கழிவுகள் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2024, 6:22 PM IST

கோயம்புத்தூர்:தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வெளி மாநில டீ தூள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கொண்டு வரப்படும் டீ தூளில் கலப்படம் செய்யப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது.

இந்நிலையில், வடமாநிலங்களில் இருந்து கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்ட பகுதிகளுக்கு தேயிலை கழிவுகள் கொண்டுவரப்படுவதாகவும், தரமான தேயிலை தூளுடன், தேயிலை கழிவுகளை கலந்து கலப்பட தேயிலை தயாரிக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுவதாகவும் தேயிலை வாரிய குன்னூர் மண்டல அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்படும் தேயிலை கழிவுகள் (Credits- ETV Bharat Tamil Nadu)

இதனையடுத்து, பல்வேறு குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் இவற்றை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து கோவைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட 10 லட்ச ரூபாய் மதிப்புடைய
13,600 கிலோ எடையிலான தேயிலை கழிவுகளை, துடியலூர் அருகே தேயிலை வாரிய குன்னூர் மண்டல அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை (டிச.12) மடக்கி பிடித்தனர் .

பின்னர், அதை துடியலூர் அருகில் இருக்கக்கூடிய குடோனுக்கு கொண்டு சென்று கண்டெயினரை திறந்து, அந்த தேயிலை கழிவுகளை இறக்கி பரிசோதிதனர். அப்பொழுது, அவை தரம் குறைந்த தேயிலை கழிவுகள் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தேயிலை கழிவுகளை குழி தோண்டி, அவற்றுடன் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றை கலந்து அதிகாரிகள் பூமியில் புதைத்தனர்.

இதையும் படிங்க:கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் முறைகேடு?: என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - ஐகோர்ட் கேள்வி! - MADRAS HIGH COURT

மேலும், இந்த தேயிலைக் கழிவுகளை வாங்கிய நபரின் விவரங்களையும், தேயிலை கழிவுகள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்த விளக்கத்தையும் தேயிலை வாரியத்திடம் வழங்க வேண்டும் என குடோன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்திய
அதிகாரிகள்.

கடந்த காலங்களில் இதுவரை கொள்முதல் மற்றும் விநியோகம் செய்த தேயிலை மற்றும் தேயிலைக் கழிவுகள் தொடர்பான ஆவணங்களையும் தேயிலை வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், தேயிலை கழிவுகளை வாங்கிய நபர்களிடம் இருந்து பெறப்படக்கூடிய ஆவணங்களின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேயிலை வாரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது போன்று வடமாநிலங்களில் இருந்து முறையற்ற முறையில் தேயிலைக் கழிவுகளை வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேயிலை வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details