சென்னை: மலை வாசஸ்தலங்களில் மதுபாட்டில்களை வீசிச் செல்வதால் விலங்கினங்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக விற்கவும், திருப்பித் தரப்படும் காலி பாட்டிலுக்கு ரூ.10ஐ திருப்பிக் கொடுக்கும் வகையில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மலைப்பகுதிகளில் அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த திட்டம் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு நேற்று (ஜூலை 5) மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.