சென்னை:தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணமாக 5 ஆயிரத்திற்கும் மேல் கவுண்டர்களில் பணமாக வசூலிக்கப்படாது என தமிழ்நாடு மின்சார பகிர்மானக் கழகம்(TANGEDCO) அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் 2023 செப்டம்பர் 8-ஆம் தேதி திருத்தப்பட்ட உத்தரவில், "குறைந்த அழுத்த மின் நுகர்வோர்கள் 2 மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் போது, வங்கிகள் மூலம் செலுத்துவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆயிரம் ரூபாய் வரையில் மின்சார அலுவலகத்தின் கவுன்டர்களில் வாங்கலாம் எனவும், மின் கட்டணம் செலுத்த வரும் நுகர்வோர்களிடம் வரும் காலங்களில் வங்கிகள், ஆன்லைன், டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் செலுத்துதற்கு அறிவுறுத்தலாம்" எனவும் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் என்பது முக்கியமானதாக கருதப்படும் இந்த காலத்தில், அவசரத்திற்கு உணவு சமைப்பது முதல் அலுவலக பயன்பாடு வரை அனைத்துக்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்காலத்தில் ஏசியில் பழகியவர்கள் தங்களின் வீட்டில் குறைந்தது இரு ஏசி பொருத்தி உள்ளனர்.
இதையும் படிங்க:செல்போனை ஆப் செய்தால் கடும் நடவடிக்கை பாயும்: அமைச்சர் செந்தில் பாலாஜி வார்னிங்!
குளிப்பதற்கும் ஹீட்டர், அவிப்பதற்கு ஓவன், சமைப்பதற்கு இன்டக்ஷன் ஸ்டவ், வாஷிங் மெஷின், அயர்ன் பாக்ஸ் என தினமும் பெரும்பாலானவர்கள் வீடுகளில் பயன்படுத்துகின்றனர். மேலும் 2 மாதத்திற்கு ஒரு மின் கணக்கீடு நடைபெறுவதால், ஆயிரக்கணக்கில்தான் மின் கட்டணம் செலுத்து வருகின்றனர்.
அதே போல் மின்வாரிய அலுவலகத்திற்கே போய் மின் கட்டணத்தை செலுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த நிலையில் ரூ 5000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால் மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள கவுன்ட்டரில் கட்ட முடியாத படி மின்சார வாரியம் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் இனி ரூ.5000-த்திற்கு மேல் மின் கட்டணத்தை பணமாக கவுன்ட்டரில் செலுத்த முடியாது. காசோலை, டிடி மூலம் மட்டுமே செலுத்த முடியும். அதே வேளையில் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை, கூடுதல் பணத்தையும் வங்கிகள் வசூலிக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்தடுத்து வரும் மாதங்களில் நேரடியாக செலுத்தும் தொகை படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் வாரியம் அறிவித்திருக்கிறது. அதேபோல ரூ.1000 அல்லது அதற்கு மேலான மின் கட்டணங்களை ஆன்லைன் மூலமே செலுத்த வேண்டும் எனவும் அறிவித்திருக்கிறது.