சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில், "பொதுமக்கள் தங்கள் நிலம் அல்லது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள மின்கம்பம், மின்கம்பி, மின்பாதை, மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்யக்கோரி, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விண்ணப்பிக்கும் போது, மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 22 சதவீதம் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணமாக (Establishment and Supervision Charges) செலுத்த வேண்டி இருந்தது.
மின்சாதனங்களை இடம் மாற்றம் செய்வதற்கான கட்டணம் 5% ஆக குறைப்பு - TANGEDCO அறிவிப்பு! - TANGEDCO announcement
TANGEDCO: மின் சாதனங்களை இடமாற்றம் செய்யும்போது மொத்த மதிப்பீட்டுத் தொகையில் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணம் (Establishment and Supervision Charges) 22 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
Published : Mar 15, 2024, 4:42 PM IST
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் படி, 22 சதவீத நிர்வாகம் மற்றும் மேற்பார்வை (Establishment and Supervision Charges) கட்டணத்தை 5 சதவீதமாக குறைப்பதற்கு வாரிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டுத் தொகை வெகுவாக குறைவதால் பொதுமக்கள் மிகவும் பயனடைவார்கள்" என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:கோடை காலத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?