தமிழ்நாடு

tamil nadu

24 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பணியிட மாற்றம்.. தமிழக அரசின் தொடரும் அதிரடி நடவடிக்கை! - IPS Transfer

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 4:26 PM IST

IPS Transfer: தமிழகத்தில் 24 காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ்பியாக பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழ்நாடு காவல்துறையில் எஸ்பி அந்தஸ்தில் இருந்த 56 காவல்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று கூடுதல் கண்காணிப்பாளராக (Additional Superintendent of Police) இருந்த 24 காவல் அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளராக (Superintendent of Police) பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் உத்தரவை வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்ற விவரம்:

  • கோவை நீதிமன்ற ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த பி. மணிகண்டன், மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளராக(Vigilance & Anti-Corruption) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தஞ்சவூர் காவல் தலைமை அலுவலக கூடுதல் கண்காணிப்பாளர் வி. ஜெயசந்திரன், கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு சென்னை பெருநகர மாநகராட்சியின் மத்திய கு பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குதலிங்கம் கண்காணிப்பாளராக பதவி உயர்வு செய்யப்பட்டு சென்னை தி.நகர் காவல் நிலைய துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • மதுரை உயர்நீதிமன்ற ஊழல் கண்கானிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எஸ். விஜயகுமார் தவி உயர்வு பெற்று திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சி.ஐ.டி, சிறப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த கார்த்திக்கேயன், பதவி உயர்வு பெற்று சென்னை காவல் துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையின் சைபர் குற்றவியல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த சங்கு, பதிவு உயர்வு பெற்று, போச்சாம்பள்ளி சிறப்பு காவல் படை பட்டாலியனின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு காவல்துறையில் அதிரடியாக அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதேபோல் சட்ட ஒழுங்குகளில் இருந்த பல்வேறு காவல்துறை உயர் அதிகாரிகள் வெவ்வேறு பணிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், காவல்துறை நிர்வாகத்தில் பணிபுரிந்து வந்த காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பணிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பணியாற்றி உயர் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, உயர் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:மேலும் 32 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்; அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தமிழகஅரசு! - TN Police higher officers transfer

ABOUT THE AUTHOR

...view details