தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2025 பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு - Pongal veeti - PONGAL VEETI

2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்திற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தலைமை செயலகம்(கோப்புப் படம்)
தலைமை செயலகம்(கோப்புப் படம்) (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 2:04 PM IST

சென்னை:தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும், கிராமப்புற மற்றும் நகர்ப் புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது.

அதனனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 2025 ஆம் ஆண்டிற்காக 1 கோடியே77 லட்சத்து 64 ஆயிரத்து 476 சேலைகளும், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகளையும் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல் 2024 பொங்கல் பண்டிகைக்காக பயனாளிகளுக்கு விநியோகம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டு இருப்பில் உள்ள வேட்டி, சேலைகளை நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கைரேகை கட்டாயம்:பொதுமக்களுக்கு வேட்டி, சேலையினை விநியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்ய ஏதுவாக, கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய்த் துறை தலைமையில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வேட்டி சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய, ரேஷன் கடைகளின் விற்பனை முனையத்தில் (Point of Sale Machine) விரல் ரேகை பதிவு (Bio metric Authentication) கட்டாயமாக்கப்படுகிறது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பருவமழை முன்னெச்சரிக்கை; மின் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details