சென்னை:ஜார்கண்ட் மாநில சட்டசபையின் 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநில காங்கிரஸிற்கு ஆதரவாக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை ஜார்கண்ட்டில் வாக்கு சேகரிக்க சென்றிருந்தார்.
பாஜக மக்களை நம்பி இல்லை: அதனைத் தொடர்ந்து நேற்று சென்னை வந்தடைந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொது அவர் கூறியதாவது, “ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணிக்காக 2 நாள் பிரச்சாரம் செய்து வந்து உள்ளேன். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடைய போகிறது. ராகுல் காந்தி அலை வீசி கொண்டு இருக்கிறது. பாஜக தேர்தலில் மக்களை நம்பி இல்லை. இயந்திரத்தை நம்பி உள்ளது.
செல்வப்பெருந்தகை பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:விஜய் முதல் அரசியல் கன்னிப் பேச்சு.. ஆர்.எஸ்.பாரதி முதல் ஆதவ் அர்ஜுனா வரை.. அரசியல் தலைவர்கள் கருத்து!
பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்:இந்த தேர்தலில் அதுவும் எடுபட போவதில்லை. விலை வாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவை தான் பாஜக-வின் வேலை. மக்கள் நலனில், வாழ்க்கையில் அக்கறை இல்லாத அரசாக 10 ஆண்டுகளுக்கும் மேல் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இதை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் மக்கள் முடிவை நாம் பார்க்க போகிறோம்.
எங்கும் மாற்றம்:விஜய் மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். எங்கும் மாற்றம் ஏற்பட போகிறது. பாஜக ஆட்சியில் மாற்றம் ஏற்பட போகிறது. மாற்றம் ஒன்றே மாற்ற முடியாத ஒன்று. இது எல்லாருக்கும் தெரிந்தது தான். புதுசு ஒன்னும் இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். மாநாடு நடத்தலாம். மாநாட்டை விரைவாக முடிக்க போலீஸ் அழுத்தம் கொடுக்க வாய்ப்பில்லை. சின்ன வயதில் எல்லாரும் பாம்பை பிடித்து தான் வளர்ந்து இருப்பார்கள்” என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்