தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்.. தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு? - TN VOTER LIST 2025

2025 ஆம் ஆண்டின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 5:35 PM IST

Updated : Jan 6, 2025, 9:22 PM IST

சென்னை:2025 ஆம் ஆண்டின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், இவர்களில் 3.11 கோடி ஆண், 3.24 கோடி பெண் மற்றும் 9,120 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் 2025 ஆம் ஆண்டின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இந்று வெளியிட்டார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பேட்டி (ETV Bharat Tamilnadu)

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், " 2025 ஆம் ஆண்டு சுருக்கமுறை திருத்தத்தின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள வாக்காளர் எண்ணிக்கை 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 எனவும், இவர்களில் 3 கோடியே 11 லட்சத்து 74,027 ஆண் வாக்காளர், 3 கோடியே 24 லட்சத்து,29,803 பெண் வாக்காளர்கள் மற்றும் 9,120 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்" என்றும் கூறினார்.

மேலும், " 6 லட்சத்து 90 ஆயிரத்து 958 வாக்காளர்களுடன் சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும்,1 லட்சத்து 76 ஆயிரத்து 505 வாக்காளர்களுடன் கீழ்வேளூர் தொகுதி குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களை கொண்ட தொகுதியாகவும் உள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், "இறுதி வாக்காளர் பட்டியலில் 3,740 வெளிநாடு வாழ் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 01.01.2025 அன்று 18 வயது நிரம்பிய தகுதி உள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,திருத்த,நீக்க படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் மற்றும் வோட்டர் ஹெல்ப்லைன் செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம்." எனவும் அவர் குறிப்பி்டடார்.

"இரண்டு அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குமாறு அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி மாவட்ட தேர்தல் தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான விவரங்களை இம்மையங்களில் அறிந்து கொள்ளலாம்.

"28.11.2024 மற்றும் 06.01.2025 -க்கு பிறகு பெறப்பட்ட படிவங்கள் படிவங்கள் மீதுி தொடர் திருத்த காலத்தில் கள ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அர்ச்சனா பட்நாயக் கூறினார்.

Last Updated : Jan 6, 2025, 9:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details