தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 3:35 PM IST

ETV Bharat / state

"தமிழகத்தில் போதை கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும்".. தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தல்! - Drug smuggling cases in Tamil Nadu

Tamilisai Soundararajan: தமிழகத்தில் போதை கலாச்சாரம் மற்றும் வன்முறை கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan
தமிழிசை சௌந்தரராஜன் (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வேலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மைசூர் வந்தே பாரத் மூலம் பயணம் செய்தார்.

இதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மக்கள் நன்றாக புரிந்து இருக்கிறார்கள் பிஜேபி NDA கூட்டணி அதிக பெரும்பான்மை வந்துவிட்டது. மத்தியில் 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்.

மத ரீதியாக மக்களை பிரதமர் பிளவுபடுத்துகிறார் என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், பிரதமர் யாரையும் அப்படி பிளவுபடுத்தவில்லை. எல்லாரையும் ஒன்றாகத்தான் இணைக்கிறார். அந்த வகையில், முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது. ஹஜ் பயணத்திற்கு பெண்களை அழைத்துச் செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.

மேலும், அனைத்து திட்டங்களையும் பெரும்பான்மை மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் இணைத்துதான் தருகிறார். சிறுபான்மையினர் மற்றும் பெரும்பான்மையினர் மக்களை பிரித்தே வைத்திருந்தால்தான் காங்கிரஸ் ஓட்டு வாங்க முடியும் என்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். இதை சிறுபான்மையினர் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று எனக்கு தெரியும்" என்று கூறினார்.

தொடர்ச்சியாக பேசிய அவர், "தமிழகத்தில் போதை கலாச்சாரம் மற்றும் வன்முறை கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். தற்போது உள்ள சூழலில், பேருந்தில் பயணம் செய்தால் இருக்கைக்கு அடியில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருக்கிறதா என்று அச்சப்பட வேண்டியுள்ளது.

தமிழக அரசுக்கு மக்களின் மீதான அக்கறை குறைந்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டம் மூலமாக உயிரிழப்புகள் அதிகமாகிறது. ஆகவே, ஆன்லைன் சூதாட்டத்தில் உள்ள பிரச்னைகளை சட்ட ரீதியாக அணுக வேண்டும். சூதாட்டத்தில் ஈடுபட்டு உயிரை இழக்காதீர்கள் என்று இளைஞர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழகத்தில் கல்வி 'கலைஞர்' மயமாக்கப்பட்டு வருகிறது - தமிழிசை சௌந்தரராஜன் சாடல்!

ABOUT THE AUTHOR

...view details