சென்னை:தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று (ஏப்.17) மாலையில் தொண்டர்கள் உடன் கோயம்பேட்டில் இருந்து வடபழனி வழியாக மயிலாப்பூர் சென்று, தி.நகர் சட்டமன்றத் தொகுதியில் முப்பாத்தம்மன் கோயில் அருகே தனது இறுதி பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
சென்னை தி.நகரில் பிரசாரத்தை நிறைவு செய்த தமிழிசை செளந்தரராஜன்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
Tamilisai Soundararajan: தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஏப்.17) மாலையில், தி.நகர் சட்டமன்றத் தொகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
Published : Apr 17, 2024, 8:44 PM IST
அப்போது பேசிய தென் சென்னை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், “எனது தாய் உயிருடன் இருக்கும் பொழுது அடிக்கடி முப்பாதம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார். இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்து பணியாற்றிய நிர்வாகத் திறமை எனக்கு உள்ளது. இரண்டு முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மூன்று முதலமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளேன்" என்று பேசினார்.
இதையும் படிங்க:விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' பாகம் 2 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது! - Chiyaan 62 Title Teaser Out