தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திராவிட மாடல்.. பாசிசம் எதிர்ப்பு.. தவெக முதல் மாநாட்டில் விஜய் முதல் முழு மேடைப்பேச்சு! - TVK MAANAADU VIJAY SPEECH

அரசியல் பாம்பு என்றால் அதை கையில் எடுத்து விளையாடும் குழந்தை நான், அரசியல் களத்தைவிட்டு திரும்ப மாட்டேன் தயாராக தான் வந்துள்ளேன் அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவோம் என விஜய் கூறியுள்ளார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய் (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 6:28 PM IST

Updated : Oct 27, 2024, 7:53 PM IST

விழுப்புரம்:தவெக மாநாட்டு மேடையில் பேசிய விஜய், “ஒரு குழந்தை அம்மா என்ற சொல்லிய பிறகு, அந்த உணர்வு அம்மாவுக்குத் தெரியும். ஆனால், குழந்தைக்குத் தெரியாது. அதை உணர்ந்த சிலாகித்த உணர்வோடு தான் உங்கள் முன் நிற்கிறேன். அம்மாகிட்ட உணர்வைச் சொல்ல முடியாத நேரத்தில் பாம்பு வந்தால், அந்த குழந்தை பயமில்லாமல் பாம்பையும் பிடித்து விளையாடும். பாச உணர்வு என்னவென்று தெரியாத , பயம் எப்படி தெரியும். பாம்பு தான் அரசியல். அதை கையில் எடுத்து விளையாட தொடங்குவது தான். அரசியலுக்கு குழந்தை என்கிறார்கள். அரசியல் ஒன்றும் சினிமாத் துறை அல்ல. பாம்பாக இருந்தாலும், பாலிட்டிக்ஸாக இருந்தாலும் செயல்பாட்டுடன் இருக்க வேண்டும்.

மேடைப்பேச்சின் ஃபார்மட்டை மறந்துவிட்டேன். மேடையில் இருந்தாலும் சரி, மேடையில் இல்லாமல் இருந்தாலும் சரி, நான் இல்ல, நாம். ஒட்டுமொத்தமாக உங்கள் அனைவருக்கும் வணக்கம். அரசியல் மாறக்கூடாதா? முன்னேறக் கூடாதா? அரசியல் மாற வேண்டும். பசி, உழைப்பு, வீரம் அனைத்தும் மாறாதது. சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறினாலே போதும், மக்கள் மீது நம்பிக்கை வரும். மண்ணில் வாழ்ந்தவர்கள், மண்ணுக்காக வாழ்ந்தவர்கள், பெரியார், பெயிண்ட் டப்பா பிஸ்னஸ், பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர், கடவுள் மறுப்பு மட்டுமே கையில் எடுக்கவில்லை; அதை நாங்கள் எடுக்கவில்லை, அண்ணாவை ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்.

காமராசர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள், இவர்கள் வேகமானவர்கள், ஆனால் விவேகமானவர்கள் என சொல்ல வேண்டும், சொல் அல்ல, செயல் செயல் செயல் தான். அரசியல் போரில் சமரசத்துக்கு இடமில்லை. நெருப்பாக செயல்படுவோம். நண்பா நண்பி.. சாரி.. தோழா.. தோழி..

அரசியல், நாம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது சுயநலம்.. நமக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்த என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கு அரசியல் என்ற விடை கிடைத்தது. களத்தில் இறங்கினால் தான் ஜெயிக்க முடியும் என நினைத்தேன். இப்போ இறங்கியாச்சு.. எதிரிகள் யார் என்பது அவர்களே முன்னால் வருவார்கள். கட்சி அறிவிப்பின் போதே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதைப் போன்று யார் எதிரி என்பதை தீர்மானித்துவிட்டோம். அப்போது கதறல் சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது. இனி அதிகரிக்கும்.

ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பதே முக்கியமானது. ஊழல் என்பதை 100 சதவீதம் ஒழிக்க வேண்டும். பிளவுவாத சக்தி என்பது நமக்கு தெரிந்துவிடும். முகமூடி போட்ட ஊழல் கபடதாரிகள் தான் அருகில் உள்ளனர். மதச்சார்பின்மையைப் பின்பற்றும் தமிழ் மண்.

இதையும் படிங்க:மாநாட்டில் தவெக கொடி ஏற்றினார் விஜய்.. கொடிக்கம்பத்தில் இத்தனை சிறப்பா?

சாதி இருக்கும், சைலண்டாக இருக்கும், அதை வைத்து நம்மை மாற்ற நினைத்தால் அதனை மக்களே அனுமதிக்க மாட்டார்கள். முடிவுகள் தருகிற திட்டங்களை அமல்படுத்தி, அதனைக் கண்காணிக்க வேண்டும். மக்களுக்காக கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் நடைமுறையில் சாத்தியமானதை கொண்டு வர வேண்டும்.

மீன் பிடித்துக் கொடுங்கள், மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள், மீன் பிடிக்கட்டும், தெரியாதவர்களுக்கு மீன் கொடுப்போம். நாங்கள் மாற்று சக்தி அல்ல. நாட்டுக்கு கேடு செய்கிறவர்களை ஒழிக்க வேண்டும், இந்த மாபெரும் சக்தியுடன் சேர்த்து எடுத்த முடிவு, சரியான திட்டத்துடன் வந்துள்ள கூட்டம்.

சோஷியல் மீடியாவில் சண்டை போடும் கூட்டம் அல்ல, ட்ரோல், ஆபாசம், அல்லு சில்லு ஏ டீம், பி டீம் அப்டினுலாம் சொல்லி வீழ்த்த வேண்டும் என நினைத்து விடாதீர்கள் நம் சொந்தம், உறவு, ஒரு குடும்பமாக வெளியுலகில் இருக்கிறார்கள், போருக்கான நாள், 234 தொகுதிகளிலும் தவெக சின்னத்துக்காக அழுத்துகிற ஒவ்வொரு பட்டனும் அனுகுண்டாக மாறும். பாசிசம் மட்டுமே சொல்கிறார்கள் அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா? சிறுபான்மை, பெரும்பான்மை, மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுகிறீர்கள்,

பிளவுவாத அரசியல் செய்பவர்கள் எதிரி, திராவிட மாடல் என்ற பெயரில் இருக்கும் குடும்ப சுயநலக் கூட்டம் தான் அரசியல் எதிரி, திராவிடத்தையும், தமிழ் தேசியமும் மண்ணின் இரு கண்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், எங்களின் அரசியல் பயணத்தில் முக்கியப் பங்கு வகிக்கப்போவது பெண்கள், அம்மாக்கள், சகோதரிகள், நண்பிகள். வித்யா இறந்தபோது ஏற்பட்ட பாதிப்பு தான் அனிதா இறப்பின் பாதிப்பு. அதற்கு எதிராக இருக்கும் நீட். உங்கள் விஜய் களத்தில் வந்துவிட்டார். குட்டீஸ் முதல் பாட்டீஸ் வரைக்கும் இருப்பேன். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 27, 2024, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details