தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... புதுக்கோட்டை மீனவர்கள் ஒன்பது பேர் கைது! - Pudukkottai Fisherman arrest - PUDUKKOTTAI FISHERMAN ARREST

Pudukkottai Fisherman arrested in Sri Lanka: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளையும் நெடுந்திவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மீன்பிடி படகு- கோப்புப் படம்
மீன்பிடி படகு- கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 9:16 PM IST

சென்னை:புதுக்கோட்டை மாவட்ட துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகையும், அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு கடல்பகுதியில் வைத்து கைது செய்துள்ள்னர்.

இரண்டு விசைப்படகும், அதிலிருந்த 9 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், அந்த மீனவர்கள் காங்கேஷன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களிடம் முதல் கட்ட விசாரணை நடத்திய பின்னர், நாளை (செப்டம்பர் 5) காலை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் 9 பேரும் ஒப்படைக்க உள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தலைமன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்துள்ள நிலையில், அந்த சம்பவத்தில் மீனவர்கள் சென்ற படகு மீது, இலங்கை கடற்படையினர் ரோந்து படகு மோதி மீனவர் ஒருவர் அண்மையில் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் (ஆகஸ்ட் 8) நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 30க்கும் மேற்பட்டவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தும் குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை விசைப்படகோடு சிறைபிடித்த இலங்கை கடற்படை.. மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details