கரூர்:தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் 12,525 ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு எடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கரூர் மாவட்ட தலைவர் வி.பாலுசாமி தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கினார். மேலும், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் வளர்மதி, மாநில செயற்குழு உறுப்பினர் நேசமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். கரூர் மாவட்டச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சண்முகம் உள்ளிட்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 157 ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் பாலுசாமி கூறுகையில், “தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் சிறப்பு கால முறை ஊதியத்தின் கீழ் சம்பளம் பெற்று வந்தனர். அதன் பின்னர் கோரிக்கைகளை ஏற்று அரசு காலமுறை ஊதியம் வழங்கி கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.