சென்னை: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் வருவாய்த்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசினார்.
அப்போது பேசிய அவர், "திருமணம் ஆகாத ஆண்களுக்கு இணையாக திருமணம் ஆகாத மகளிருக்கும் சம உரிமைகளை வழங்க தமிழ்நாடு நிலச் சீர்திருத்தச் சட்டத்தில் குடும்பம் என்பதற்கான பொருள் வரையறையிலிருந்து, திருமணமாகாத மகள்கள் மற்றும் திருமணமாகாத பேத்திகள் எனும் சொற்றொடர்கள் விட்டுவிடப்பட்டு, சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட உச்சவரம்பு பரப்பளவு வரையிலான நிலங்களை உரிமை வயதடைந்த திருமணமாகாத மகளிர் தனியாக உடைமையில் கொண்டிருப்பதை இயல்விப்பதற்காக உரிமை வயதடையாத குழந்தைகள் மற்றும் உரிமை வயதடையாத பேரக்குழந்தைகள் எனும் சொற்றொடர்கள் மாற்றாக அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.