தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.15 கோடியில் புதுப்பொலிவு பெறும் ராமேஸ்வரம் தீவு! அரசாணை வெளியீடு - Rameswaram Island Development Fund - RAMESWARAM ISLAND DEVELOPMENT FUND

Rameswaram Island Development Fund: ராமேஸ்வரம் தீவில் சமூக அடிப்படையிலான 'சூழல் சுற்றுலா திட்டத்தை' செயல்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக அரசு இன்று வெளிிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மதிவேந்தன், அரசாணை
அமைச்சர் மதிவேந்தன், அரசாணை (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 5:57 PM IST

ராமநாதபுரம்:மன்னாா் வளைகுடா உயிா்க்கோளக் காப்பகத்தின் முக்கிய பகுதியாக ராமேஸ்வரம் தீவு உள்ளது. இங்கு உள்ள தனுஷ்கோடிக்கு ஆண்டுக்கு 2 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், மன்னாா் வளைகுடா உயிா்க்கோளக் காப்பக அறக்கட்டளையில் உள்ள சமூக அடிப்படையிலான அமைப்புகள் மூலம் இராமேஸ்வரம் தீவு 'சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ்' ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இதன்படி இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்து இன்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதில் ராமேஸ்வரத்தின் பவளப்பாறை, படகு சவாரி, சதுப்பு நில நுழைவு வாயில் பகுதி, குருசடை தீவு, சூழல் சுற்றுலா, பறவைகள் கண்காணிப்பு மையம், ஆமைகள் விளக்க மையம், கோதண்ட ராமர் கோவில் கழி முகப்பகுதி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:தொடர் விடுமுறையால் உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள்; பார்வையாளர்களை ஈர்க்கும் தாவரவியல் பூங்கா!

ABOUT THE AUTHOR

...view details