சென்னை:நடப்பாண்டிற்கானமுதல் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
இந்த பட்ஜெட்டில் சென்னையில் மேற்கொள்ள உள்ள நலத்திட்ட பணிகள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முதலாவதாக சிங்காரச் சென்னை இரண்டாவது திட்டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பகுதியில் சாலைகளை விரிவுபடுத்துவதற்காக ரூ. 300 கோடியும், பெசன்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.