சென்னை:2023ஆம் ஆண்டில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 175 மாணவர்கள் பதிவு செய்ததில், ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847 மாணவர்கள் கட்டணம் செலுத்தினர். அவர்களில் தகுதியான ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 959 மாணவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டனர். 2022ஆம் ஆண்டில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 115 மாணவர்கள் பதிவு செய்ததில், 1 லட்சத்து 67ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி கலந்தாய்வில் பங்கேற்றனர்.
சென்ற வருடம் (2023-24) கலந்தாய்வில், 474 கல்லூரிகளில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 196 இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியது. அதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 887 மாணவர்கள் சேர்ந்தனர். அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் படித்த மாணவர்களுக்கான மொத்த இடங்கள் 12 ஆயிரத்து 136 ஆகும். அதில், 9 ஆயிரத்து 960 மாணவர்கள் சேர்ந்தனர்.
2024ஆம் ஆண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கு மே 6ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 848 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 439 மாணவர்கள் கட்டணம் செலுத்தி உள்ளனர். 1 லட்சத்து 76 ஆயிரத்து 145 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். பொறியியல் படிப்பில் சேர்வதற்கு கட்டணம் செலுத்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை 12ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.