சென்னை:'Pharm Easy' என்ற போலி ஆன்லைன் மருந்து வணிக நிறுவனம் இன்ஸ்டாமார்ட் (Instamart) மற்றும் ஸ்விக்கி (Swiggy) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மருந்து பொருட்களை 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதற்கு மருந்து வணிகர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் ரமேஷ் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; ''தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சுமார் 42,000 உறுப்பினர்களை உள்ளடக்கிய, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கத்துடன் இணைந்து சுமார் 12 லட்சத்து 40 ஆயிரம் மருந்து வணிக உறுப்பினர்களை கொண்டுள்ளது.
PharmEasy என்ற போலி ஆன்லைன் மருந்து வணிக நிறுவனம் Instamart மற்றும் Swiggy ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, மருந்து பொருட்களை 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். இது மிகவும் அபாயகரமான பாதிப்புகளை மருந்து உட்கொள்ளும் நோயாளிகளுக்கு ஏற்படுத்தும்.
இதையும் படிங்க:"முதலமைச்சர் கோவையை கவர்ந்து விட்டாரா என்பது 2026-ல் தெரியும்" - வானதி சீனிவாசன்!
அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் (AIOCD), மருந்து கட்டுப்பாட்டு பொது இயக்குனருக்கு (DCGI New Delhi) இந்த ஒப்பந்தத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.
சட்டங்களை மீறுதல் (Violation of Laws):
மருந்தாளுநர்கள் மூலமாக மட்டுமே மருந்துகள் நோயாளிகள் அல்லது நோயாளிகளின் உதவியாளர்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். இந்தியாவில் மருந்துப் பொருட்களின் விற்பனையில் கண்டிப்பாக சட்ட விதிகள் பின்பற்றப்படுகின்றன. இந்த புதிய ஒப்பந்தம் மூலம் வியாபாரம் செய்வது சட்ட விதிகளை புறக்கணித்து, எந்தவித மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமலும், மருத்துகளை விற்பனை செய்வது மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
நுண்ணுயிர் எதிர்ப்பு Anti-Microbial resistance (AMR):
அரசாங்கம் பல முயற்சிகள் மேற்கொண்டாலும் நுண்ணுயிர் எதிர்ப்பு அச்சுறுத்தலை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆகவே இது போன்ற E-Pharmacies-ன் விதிமீறிய செயல்பாடுகளின் காரணமாக பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆன்லைன் மருந்து வணிக அபாயத்தை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே Pharm Easy சட்ட விதிகள் மீறல் காரணமாக பல வழக்குகளில் சிக்கியுள்ளனர். swiggy மற்றும் Instamart இதனுடன் கூட்டு சேர்ந்துள்ளது. நோயாளிகளின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய சுழ்நிலை உருவாகி உள்ளது.
மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்தினை மருந்தாளுநர்கள், மருந்து எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்ற முறைய நோயாளிகளோ அல்லது அவர்களது உதவியாளர்களுக்கோ எடுத்துக்கூறி மருந்து விநியோகம் செய்யப்பட்டு, மருந்துகள் முறைப்படி எடுத்துக் கொண்டால் மட்டுமே நோயாளிகளின் நலன் காக்கப்படும். இல்லையென்றால், இது நோயாளிகளின் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். ஆன்லைன் மூலமாக மருந்துகள் வாங்கினால் நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய சுழ்நிலை நிலவும். அதிவேக டெலிவரி முறையால் காலவதியான போலியான மற்றும் தடைசெய்யப்பட்ட மருந்துகள் விநியோகத்திற்கு சாத்தியமாகின்றது. இத்தகைய முறையில் விநியோகம் செய்யப்படும் மருந்துகள் தரமற்றவையாக இருக்கலாம்.
மத்திய அரசு சட்டத்தின் அனுமதியில்லாமல் ஆன்லைன் மருந்து வணிகம் செயல்படுகின்றது. இது சட்டத்திற்கு விரோதமான செயல் ஆகும். இதனால் நோயாளிகளுக்கு அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்'' என அதில் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்