சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசூரியா என்பவர் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஆந்திரா மாநிலம் விஜயவாடா கொண்டபள்ளியில் இருந்து, சென்னை தாம்பரத்திற்கு கஞ்சா கடத்துவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், ஆவடி காவல் ஆணையர் அறிவுறுத்தலில் பேரில், செவ்வாய்பேட்டை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஜெயசூரியாவிடம் சுமார் 4 கிலோ 600 கிராம் அளவிற்கு கஞ்சாவை வைத்திருந்தாக கைது செய்தனர்.
இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹெர்மீஸ் முன்னிலையில் நடைபெற்றது.
இதையும் படிங்க |
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பளித்த நீதிபதி, வழக்கில் புலன் விசாரணை அலுவலரின் அறிக்கை மற்றும் குறுக்கு விசாரணையின்போது அளித்த வாக்குமூலங்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.
ஆவணங்களை விசாரணை அலுவலர் முறையாக கையாளவில்லை. எனவே, சந்தேகத்தின் பலன்களை குற்றம் சாட்டபட்டவருக்கு சாதகமாக அளித்து, ஜெயசூரியாவை வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹெர்மீஸ் தீர்ப்பளித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.