தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024: கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்புகள்!

TN Agri Budget 2024: 2024-25 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகளை இத்தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 12:51 PM IST

Updated : Feb 20, 2024, 2:53 PM IST

சென்னை:2024-25 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) தாக்கல் செய்துள்ள நிலையில், மொத்த பட்ஜெட் மதிப்பீடு ரூ.42,281 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. வேளாண் பட்ஜெட்களின் வளர்ச்சி நடவடிக்கையாக கடந்த 3 ஆண்டுகளில் பாசனம் பெற்ற நிலப்பரப்பு 95 லட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  2. தென் மாவட்டங்களில் டிசம்பர் மழையால் ஏற்பட்ட பயிர்ச்சேதத்திற்காக 208 கோடியே 20 லட்ச ரூபாய் இழப்பீடாக 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
  3. மண்வளத்தை பெருக்குவதற்கான ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  4. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் வழங்கப்படும்.
  5. ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்து மண்வளம் காக்கவும், களர், அமில நிலங்களை சீர்படுத்தவும் வேளாண் பட்ஜெட்டில் 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் தகவல்.
  6. ஆடா தொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக் கொல்லிகளை வளர்க்கவும், வேளாண் காடுகள் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு 10 லட்சம் வேப்பங்கன்றுகள் இலவசமாக வழங்கவும் 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்.
  7. நெல் ஜெயராமனின் மரபு சார் நெல் ரகங்களை பாதுகாக்க 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல்ரக விதைகள் விநியோகம் செய்யப்படும் என அறிவிப்பு.
  8. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க வேளாண் பட்ஜெட்டில் ரூ.1.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்.
  9. எண்ணெய் வித்து சாகுபடியை விரிவாக்கம் செய்ய 45 கோடி ரூபாய் நிதியும், மானாவாரி நிலங்களில் சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க 36 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு.
  10. துவரை சாகுபடியை 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிர் செய்யும் திட்டத்திற்காக 17 கோடியே 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  11. 15 ஆயிரத்து 280 கிராமங்களில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் செயல்படுத்தப்படுத்தப்பட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் பூச்சித் தடுப்புக்கான உதவிகள் வழங்கப்படும் என அறிவிப்பு.
  12. வரும் நிதியாண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆயிரத்து 775 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  13. கன்னியாகுமரியில் 3 கோடியே 60 லட்ச ரூபாய் செலவில் தேனீ முனையம் அமைக்கப்பட்டு, தேனீ வளர்ப்போருக்கு உரிய பயிற்சி வழங்கப்படும் என அறிவிப்பு
  14. வாழைக்கான சிறப்பு திட்டம் 12 கோடியே 73 லட்ச ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் எனவும், வாழை சேதத்தை தவிர்ப்பதற்காக கழிகள் மூலம் முட்டுக் கொடுக்க மானியம் கொடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
Last Updated : Feb 20, 2024, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details