திருச்சி:விஜயின் கட்சி கொள்கை மற்ற கட்சிகளை திருப்தி படுத்துவதாக இல்லாமல் தன் கட்சியின் வளர்ச்சிகானதாக இருக்க வேண்டும் என ் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா இன்று (நவ.07) திருச்சியில் நடைபெற்றது. இதில்,அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜி.கே.வாசன், “தமிழகத்திற்கு மாதந்தோறும் முறையாக பாசனத்துக்கான தண்ணீரை கர்நாடக அரசு தவறாமல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் டெல்டா விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற் பயிர், உயிர் பிரச்சனையாக இருப்பதால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 13.28 டி.எம் சி தண்ணீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என்பதை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அரசியல் கூட்டணிகளுக்கு அப்பாற்பட்ட அரசாக திமுக அரசு செயல்பட வேண்டும்.
ஜி.கே வாசன் பேட்டி (Photo Credits - ETV Bharat Tamil Nadu) மேலும், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கும் விதைகளை, தொடக்க கூட்டுறவு வேளாண் சங்கங்கள் வாயிலாக வழங்க வேண்டும்.
இதையும் படிங்க:'குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே'.. அமைச்சர் சேகர்பாபுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி..!
அரசு பேருந்துகளை முறையாக பராமரித்து, விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் வேளாண் இயந்திரங்களை பாகுபாடின்றி வழங்க வேண்டும். அரசியல் கட்சிகளின் பரிந்துரைப்படி வழங்குவதை நிறுத்த வேண்டும். தமிழகத்தில் பருவ மழை தொடங்கி இருப்பதால், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு உள்ளிட்டவை பரவாமல் தமிழக அரசின் சுகாதாரத்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் அவருடைய கட்சியின் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும். மற்ற கட்சிகளை திருப்தி படுத்துவதற்காக கொள்கை கோட்பாடுகளை அவர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கட்சியின் ஏடீம், பி டீம் என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு. அவருடைய கட்சி செயல்பாடுகள் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,”என்று தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்