டெல்லி: கடந்த 2021ஆம் ஆண்டு பணியில் இருந்த பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், முன்னாள் டிஜிபி ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அந்த தண்டனையை கடந்த மாதம் 12ஆம் தேதி விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த நிலையில், ராஜேஷ் தாஸ் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், உயர் நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. இதனை எதிர்த்து ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.