சென்னை: சென்னை பெரியமேடு காவல் நிலையத்திற்கு இன்று (ஆக.7) காலை புகார் தெரிவிக்க வந்த நபர் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு காவல் நிலைய வளாகத்தில் விழுந்துள்ளார். அச்சமயம் அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளரான கோபிநாத் மற்றும் மற்ற சில காவலர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி செய்து அவரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உதவி ஆய்வாளர் கோபிநாத் வலிப்பு ஏற்பட்ட நபரின் கையில் இரும்பு சாவியைக் கொடுத்து, அவரின் தலை தரையில் மோதிக் கொள்ளாமல் இருக்க அவர் இரு காதுகளையும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்ட நிலையில், அதன் பின்னர் அந்த நபர் சுய நினைவிற்குத் திரும்பியதை உறுதிப்படுத்தி சக காவலர்கள் அவரிடம் ஆறுதலாகப் பேசி தட்டிக் கொடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, வலிப்பு ஏற்பட்ட நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அந்த நபருக்கு முதலுதவியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காவலர் கோபிநாத்திடம் கேட்டபோது, "பொதுவாக வலிப்பு ஏற்பட்ட நபர்கள் தங்களை அறியாமல் தங்கள் தலையை தரையில் இடித்துக் கொள்வார்கள் இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக மாறிவிடக்கூடும்.