சென்னை:தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்ததை தொடர்ந்து, இத்திட்டத்தினை அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா கூட்டரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னையில் முதற்கட்டமாக 135 கல்லூரிகளில் 10,304 மாணவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக இத்திட்டத்தின் மூலம் ரூ.1000 பற்று வைக்கப்பட்டுள்ளது.
6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியில் படித்து கலை அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் சார்ந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் இந்த திட்டம் மூலம் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தினால் தொழில் கல்வி பயிலும் மாணவர்களும் பயன்பெறலாம். அரசுப் பள்ளி மாணவர்கள் கடந்தாண்டுகளில் சேர்ந்திருந்தாலும், அவர்கள் படிக்கும் நடப்பாண்டு முதல் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.