தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் வடகிழக்கு பருவமழை முடியும் வரை மருத்துவ முகாம்களை நீக்கக்கூடாது - அமைச்சர் மா.சுப்ரமணியன் - NORTH EAST MONSOON

வடகிழக்கு பருவ மழை காலம் முடியும் வரை எந்த விதமான முன்னேற்பாடுகள் மற்றும் மருத்துவ முகாம்களை திரும்ப எடுக்கக் கூடாது என உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறினார்.

அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், கோவி. செழியன்
அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், கோவி. செழியன் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2024, 3:35 PM IST

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மணி விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை வழங்கினர்.

அப்போது அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில், “மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்றால் அது தமிழ் மொழி தான். பிற மொழிகள் வேலை வாய்ப்புக்கும், படிப்புக்கும் பயன்படும், தாய்மொழி தமிழ் நம் உயிராய், உடலாய், அன்னையாய், தந்தையாய் என எல்லாம் சேர்ந்தது தான் நம் தமிழ் மொழி.

தமிழ் மொழி மேலும், மேலும் சிறப்படைகிறது என்றால் அதற்கு ஆட்சியாளர்களும், திராவிட கழகமும் தான் காரணம். கருணாநிதி வந்த பிறகுதான் தமிழ் ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களாக வர முடிந்தது. சட்டமன்ற கூட்டத்தொடரில், கருணாநிதி திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பேச்சாற்றியுள்ளார். அந்த பேச்சுகளை தற்போதைய நிலையில் பார்க்க முடியுமா என்றார்.

இதையும் படிங்க: வனத்துறையில் அவுட் சோர்சிங் முறையை ஏன் அரசு கைவிட வேண்டும்? வேட்டைத் தடுப்பு காவலர்கள் கூறுவது என்ன?

பின்னர் செய்தியாளர்களைs சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, "சென்னை, மதுரை, கோவை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில், வெளி நாடுகளிலிருந்து வரும் நபர்களை பரிசோதனை செய்யும் நடைமுறை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து விமான நிலையங்களிலும் ஒரு தனிமை அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குரங்கம்மை நோயாளிகளுக்கான 10 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

சார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் 27 வயதுள்ள இளைஞர் கோவை விமான நிலையம் மூலமாக தமிழகம் வந்தடைந்தார். அவருக்கு குரங்கம்மை நோயில் இருக்கும் கொப்புளங்கள் இருந்தது. அவர் பதட்டப்பட்டு பரிசோதனை செய்யாமல் தப்பிச் சென்றார். அதனைத் தொடர்ந்து, அவரைக் கண்டறிந்து பரிசோதித்த போது, அவருக்கு 27 இடங்களில் கொப்புளங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டது. ஆனால், அவருக்கு குரங்கம்மை தொற்று இல்லை எனவும், சிக்கன் பாக்ஸ் தொற்று மட்டுமே உள்ளது என கண்டறியப்பட்டது. மேலும், மறு பரிசோதனைக்கு மாதிரிகள் பூனா ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நபர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்'' என்றார்.

மேலும், வடகிழக்கு பருவ மழை தற்போது தொடங்கியுள்ளது. ஒரு வருடத்திற்கு 44 செமீ மழை பெய்யும். ஆனால், இந்த முறை பொழிந்த மழையில் 20 செமீ-க்கும் மேலான மழை சென்னையில் பதிவாகியுள்ளது. ஆனால் எந்தவிதமான சேதமும் இன்றி முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காலம் முடியும் வரை எந்த விதமான முன்னேற்பாடுகள் மற்றும் மருத்துவ முகாம்களை திரும்ப எடுக்க கூடாது என உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது'' என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details