சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 11 பேர் மட்டுமே குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதால், அதற்கு பதில் அளிக்க ஏதுவாக விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும், இந்த வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்படவில்லை எனவும், ஒவ்வொருவரும் ஒரு திட்டத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சி போராட்டம்; அனுமதி வழங்கிய காவல்துறை ஆணையருக்கு எதிராக பாமக வழக்கு..!