சென்னை:தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு தொடர்ந்து முகவரி இல்லாமல் இறைச்சி அனுப்பப்பட்டு வரும் நிலையில், இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு டெல்லியில் இருந்து கொண்டுவரப்பட்ட 1500 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை வால்டாக்ஸ் சாலையில் உள்ள பார்சல் அலுவகத்தில் வைத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின் இந்த கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பாதுகாப்பான முறையில் கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் கூறும்போது, “கெட்டுப்போன ஆட்டு இறைச்சி ஆட்டுக்கால், கெட்டுப்போன காளான்கள் , போன்றவை பார்சலாக வந்துள்ளது. அனைத்து பொருட்களும் புழு பிடித்து அழுகிய நிலையில் உள்ளது.
இதையும் படிங்க:ஆவின் பாலகத்தில் காலாவதியான குளிர்பானங்கள்! - அதிரடி சோதனையில் சிக்கியது என்ன? -
இந்த பார்சல் கடந்த சனிக்கிழமை (செப்.7) தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு வந்திருக்கிறது. அதில் அனுப்புனர் பெறுநர் குறித்த எந்த விவரமும் இல்லை. இது போன்ற கெட்டுப்போன இறைச்சி வருவதை ரயில்வே போலீசார் தான் கண்காணிக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) இது தொடர்பாக நாங்கள் ரயில்வே போலீசாரிடம் உரிய முறையில் பார்சல் அனுப்புமாறு வலியுறுத்தியுள்ளோம். மேலும் இறைச்சியை ரயிலில் கொண்டு செல்லும் பொழுது கால்நடைத்துறை மருத்துவரிடம் ஒப்புதல் பெறுவது அவசியம். எனினும் இதில் அவ்வாறு நடக்கவில்லை. தள்ளுவண்டி கடைகளுக்கு இது போன்ற கெட்டுப்போன இறைச்சி வாங்க கூடாது என்று அறிவுரை கூறி கெட்டுப்போன இறைச்சியை வாங்குவதை தவிர்க்கும் நடவடிக்கைகளை உணவு பாதுகாப்பு துறை எடுக்க உள்ளது” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்