மதுரை:வார இறுதி விடுமுறை காலக் கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் (06051) ஜூன் 21, 23, 28, 30, ஜூலை 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.50 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு ரயில் (06052) ஜூன் 22, 24 29 ஜூலை 01, 06, 08, 13, 15, 20, 22, 27, 29 ஆகிய சனி மற்றும் திங்கட்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
தாம்பரம்-ராமநாதபுரம் ரயில் வழி: இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, கல்லல், மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: "மீதமுள்ள இரண்டாண்டு ஆட்சியில் நிச்சயம் சாதிவாரி கணக்கெடுப்பு"- தவெக தலைவர் வேல்முருகன் நம்பிக்கை! - TVK VELMURUGAN