தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரை வாட்டி வதைக்கும் வெயில்.. மக்கள் கூறுவது என்ன? - Heavy Temperature in Vellore - HEAVY TEMPERATURE IN VELLORE

Vellore people suffer from Heavy Temperature: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தால் வேலூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாவதாகவும், தமிழ்நாடு அரசு நிழற்குடை உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

Vellore people suffer from Heavy Temperature
Vellore people suffer from Heavy Temperature

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 10:50 AM IST

வேலூரை வாட்டி வதைக்கும் வெயில்

வேலூர்: தமிழ்நாட்டில் கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், வெப்பத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இனிவரும் காலங்களில் காலை 12 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறியவர்கள், பெரியவர்கள், நோயாளிகள் என யாரும் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையமும், மாவட்ட நிர்வாகமும் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வெயிலின் அளவு சதம் அடுத்து வருகிறது. இதனால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த நாட்களைவிட, இனி 3 - 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். வெயிலோடு விளையாடிய காலம் கடந்து, தற்போது வெயிலைக் கண்டு ஓடும் காலம் வந்துவிட்டது.

பொதுவாகவே, வேலூர் மாவட்டத்தில் கோடைக்காலங்களான ஏப்ரல், மே மாதங்களின் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் துவங்கி விட்டது. அதனால், கோடைக்காலம் மே மாதத்தில் தான் துவங்கும் என்பதே பலருக்கு மறந்துவிட்டது. எப்போதுமே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நகரங்களில் ஒன்றான வேலூரில், இந்த ஆண்டு நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும், கோடைக்காலத்திற்கு முன்னரே சதமடித்து வந்த வெயிலின் தாக்கம், தற்போது காலை 10 மணியிலிருந்தே உச்சி வெயில் வாட்டி வதைக்கிறது. கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பாகவே, சுமார் 108 டிகிரி செல்சியஸை வரை வெப்பத்தின் அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தேசியநெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் கானல் நீர் பூமியிலிருந்து வெளியேறி, அனல் காற்றாக வீசுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ஆகையால், பொதுமக்கள் பெரிதளவில் வெளியே வருவதைத் தவிர்த்து வருகின்றனர். அதன் காரணமாக வேலூரின் முக்கிய பிரதான சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அப்படி வெளியே வரும் நபர்களுக்காக, வெயிலின் சூட்டைத் தணிக்க இளநீர், பதநீர் மற்றும் பழ வகைகள் உள்ளிட்ட குளிர்பானங்களைக் கொண்ட சிறு சிறு கடைகள் சாலைகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.

மருத்துவர்கள் கூறும் அறிவுரை:

  • வெயிலில் செல்வதால் தோல் நோய் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்
  • வெயிலின் தாக்கம் அதிகளவு உள்ள நேரத்தில் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் வெளியே வரவேண்டாம்
  • வழக்கத்தை விட அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்
  • குளிர்ச்சியான பழ வகைகளை உள்ளிட்டவற்றை உட்கொள்ள வேண்டும்
  • வேலை நிமித்தமாக வெயிலில் செல்லும் நபர்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவுக்கு குடிநீரைப் பருக வேண்டும்
  • ORS எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலைப் பருகுவது நலம்
  • வெயிலில் செல்பவர்கள் காலணி, குடை, தண்ணீர் இவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

வெயிலின் தாக்கத்திலிருந்த தப்பிக்க அரசுக்கு பொதுமக்கள் வைக்கும் கோரிக்கை: வேலூரின் மையப்பகுதிகளான பேருந்து நிலையம் அருகே, சாலை ஓரங்களில் நிழல் குடைகள் அமைக்க வேண்டும், இதனால் அவ்வழியாக செல்லும் நடை பயணிகள் பயன் பெறுவார்கள். அப்படி அமைக்கும் நிழல் குடைகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். அரசு சார்பில் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல் அமைத்துத் தர வேண்டும். சாலை ஓரங்களில் மரங்களை நட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

வருண பகவான் கருணை கிடைக்குமா?:கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே கடந்த மாதம் வேலூரில் 101.1 டிகிரி வெப்பம் பதிவானது. அது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. தற்போது 107 வரை நீடித்துள்ள வெப்பம் இனி வரும் நாட்களில், மேலும் அதிகரிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையால் மக்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வருண பகவான் கருணை கிடைக்குமா? என வேலூர் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு; கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்! - Coimbatore Car Bomb Blast Case

ABOUT THE AUTHOR

...view details