விழுப்புரம்:தை அமாவாசை மற்றும்முகூர்த்த தினங்களை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மறையனூருக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருவதால் பிப்ரவரி 9,10 11 ஆகிய மூன்று நாட்களும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட், விழுப்புரம் சார்பாக மேல்மலையனூருக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் 510 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டப் பட்டுள்ளது.
இயக்கப்படும் பேருந்துக்கள்:கிளாம்பாக்கம் (KCBT) - 210 , காஞ்சிபுரம் -30, வேலூர் -15, விழுப்புரம் -20, புதுச்சேரி -20, திருவண்ணாமலை -20, திருக்கோவிலூர் -10, கள்ளக்குறிச்சி -5, ஆரணி/ஆற்காடு/ திருப்பத்தூர் -10
ஆகிய எண்ணிக்கையிலான பேருந்துக்கள் மேல்மறையனூருக்கு இயக்கப்படும்.