தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளியை முன்னிட்டு சென்னை டூ ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சென்னை - ராமநாதபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில் சேவையை நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் - கோப்புப் படம்
ரயில் - கோப்புப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 11 hours ago

மதுரை: மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்தில் ரயில் போக்குவரத்து முக்கியமான ஒன்றாக உள்ளது. குறைந்த கட்டணத்தில் விரைவாகவும், வசதியாகவும், எளிதாகவும் பயணிக்கக்கூடிய வகையில் ரயில்கள் இருப்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை விரும்புகின்றனர். தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். மேலும் பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் செல்வதால், கூட்ட நெரிசல் ஏற்படும்.

இதனைத் தவிர்க்க சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில் தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் - ராமநாதபுரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (வண்டி எண்: 06103) நவம்பர் 2, 4, 6, 9, 11, 13, 16, 18, 20, 23, 25, 27, 30 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 05.55 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும்.

இதையும் படிங்க:நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கு: நோட்டீஸ் வழங்கிய பின்னர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!

மறுமார்க்கத்தில் ராமநாதபுரம் - தாம்பரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06104) நவம்பர் 3, 5, 7, 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28, டிசம்பர் 1 ஆகிய நாட்களில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முன்னதாக, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி இந்த ரயில் சேவை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details