சென்னை:தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு ஜூன் மாதம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சிறப்பு ரயில் சேவை, பயணிகள் வசதிக்காக ஜூலை மூன்றாம் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06035) ஜூலை 4 முதல் ஜூலை 20 வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 09.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 01.40 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06036) ஜூலை 5 முதல் ஜூலை 21 வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 03.35 பணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.