தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரயில்; தாம்பரம் டூ திருநெல்வேலி பயணிகள் கவனத்திற்கு - Vinayagar Chaturthi Special Train

Special Train: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்கள்
ரயில்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 5:01 PM IST

சென்னை: செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன என்று என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் - திருநெல்வேலி ரயில் [06039]:இன்று (செப்.3) தாம்பரத்தில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக நாளை (செப்.4) காலை 11.30 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.

மறுமார்கத்தில், நாளை (செப்.4) இரவு 10.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக (செப்.5) காலை 11.25 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக, தென் மத்திய ரயில்வேயின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புது தில்லி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் (12622 ) நாளை (செப்.4) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • அதேபோல், ஷாலிமார்- டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (12841) இன்று (செப்.3) ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் அஞ்சல்(12840) இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • எர்ணாகுளம் - ஹதியா தர்தி அபா எக்ஸ்பிரஸ்(22838) நாளை (செப்.4) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • தாம்பரம் - சாந்த்ராகாச்சி அந்தியோதயா எக்ஸ்பிரஸ்(22842) நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • புதுச்சேரி - ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12868 ) நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • எர்ணாகுளம் - டாடாநகர் எக்ஸ்பிரஸ்(18190 ) செப்டம்பர் 5 முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • ஹவுரா - மைசூரு எக்ஸ்பிரஸ் (காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக) (22817) செப்டம்பர் 6 முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • கொச்சுவேலி - ஷாலிமார் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06081) செப்டம்பர் 6 ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • கன்னியாகுமரி - ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12666 ) செப்டம்பர் 7 முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • திருநெல்வேலி - புருலியா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22606) செப்டம்பர் 7 ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா எக்ஸ்பிரஸ்(16031) நாளை (செப்.4) விஜயவாடா மற்றும் நாக்பூர் இடையே உள்ள அனைத்து நிறுத்தங்களையும் தவிர்த்து விஜயவாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம், ராய்ப்பூர் மற்றும் நாக்பூர் வழியாக இயக்கப்படும்” என தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
    ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:செப்டம்பரில் ரத்தாகும் ரயில்கள்.. சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி, கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி பயணிகள் கவனத்திற்கு..!

ABOUT THE AUTHOR

...view details