தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா?.. இந்த தேதியை நோட் பண்ணிக்கோங்க.. ரயில் முன்பதிவு தொடங்கப்போகுது! - Pongal Train Ticket Booking

pongal train ticket booking 2025: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (Credits- Southern Railway 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 10:57 AM IST

சென்னை: தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி போகி பண்டிகையும், 14ஆம் தேதி பொங்கல், 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் 16ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, பொங்கல் பண்டிகைக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களிலும், வெளிமாநிலங்களிலும் பணியாற்றுபவர்கள் மற்றும் வெளியூர்களில் தங்கிப் பயில்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் முன்பதிவு கால அட்டவணை (GFX Credit - ETV Bharat Tamilnadu)

அதாவது, ஜனவரி 10ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர், செப்டம்பர் 12ஆம் தேதியும், ஜனவரி 11ஆல் பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 13ஆம் தேதியிலும், ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 14ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம்.

அதேபோல, ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகைக்கு பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 15ஆம் தேதி முன்பதிவு செய்யலாம். மேலும், ஐஆர்சிடிசி செயலி வாயிலாக இணையத்திலும், ரயில்வே நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் பொங்கல் விடுமுறை பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:"அந்த மனசுதான் சார் கடவுள்".. குப்பையில் கிடைத்த தங்கச் சங்கிலி.. தூய்மைப் பணியாளர் செய்த செயல்!

ABOUT THE AUTHOR

...view details